அம்மா எனும் சொல்


இந்தியா சிக்கிம் பகுதியில் ஓர் அம்மாவும் பிள்ளையும்

தமிழ்மொழியில் அம்மா எனும் சொல் இயற்கையில் தோன்றியது. பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது எனும் ஒலியை எழுப்புகின்றது. வாயை மூடும் போது ம்எனும் ஒலி எழுகின்றது.  ம்+அ.  ம்ம - ம்ம - எனும் ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா எனும் சொல்லைத் தருகின்றது.


அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவை. தாய் என்ற சொல் ஆய் எனும் சொல்லின் நீட்சியாகும். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னை எனப் பட்டாள். ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவை யாவும் பிற்காலச் சொற்களே.
 

No comments:

Post a Comment