தொட்டபெட்டா
தொட்டபெட்டா என்பது ஒரு மலையின் பெயர். ஆங்கிலத்தில் Doddabetta என்று
அழைப்பார்கள்.
இது தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை. இதன் உயரம் 2623 மீட்டர்கள். உதகமண்டலத்தில் இருந்து எட்டு
கிலோ மீட்டர் தொலைவில்
உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இந்த மலையின் உச்சியில்
இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.
தொட்டபெட்டா என்பது ஒரு கன்னடச் சொல்.
கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய என்று பொருள். பெட்டா என்றால் மலை. ஆகவே பெரிய
மலை எனப் பொருள் படும். தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு
வழங்கப் பட்ட ஒரு தமிழ்ப்பெயர் தோட்டி.
தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு
தோட்டி எனப் பட்டது.
No comments:
Post a Comment