மாயன் எண் முறைமை


மாயன் எண் முறைமை மாயன் நாகரிகத்தில் பயன்படுத்தப் பட்டு வந்த ஓர் எண் முறை ஆகும். இதன் எண்கள் மொத்தம் மூன்று குறியீடுகளை மட்டுமே கொண்டவை. அவை சுழி, ஒன்று (ஒரு புள்ளி), ஐந்து (ஒரு கோடு) ஆகியன ஆகும். 


எடுத்துக் காட்டாக, 19 என்ற எண் நான்கு புள்ளிகளையும் மூன்று கோடுகளைக் கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியும் காட்டப் படுகிறது. மாயன் நாகரிகம் மத்திய லத்தீன் அமெரிக்காவில் பல நூறு ஆண்டுகளுக்குமுன்பு இருந்த ஒரு பழமையான நாகரிகம்.

சீன வலை





சீன வலை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் ஒரு வகையான வலை அமைப்பு. இந்த வலையைக் கரையில் இருந்து இயக்குவார்கள். ஒவ்வொரு வலை அமைப்பை  இயக்க ஆறு மீனவர்கள் தேவை.


அமேசான் மழைக்காடு



இந்தக் காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்குவெடார், குயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவி உள்ளது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக் காடுகள் இங்கேதான் உள்ளன.

உலகில் வாழும் பத்து உயிரின வகைகளில் ஒரு பகுதி அமேசான் மழைக் காடுகளில் இருக்கின்றன. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பு ஆகும்.

அமேசான் மழைக்காட்டில்:

2.5 வகை மில்லியன் பூச்சி இனங்கள்

128,843 வகை முதுகெலும்பிலா உயிரினங்கள்

1294 வகை பறவைகள்

427 வகை பாலூட்டிகள்

428 வகை நிலநீர் வாழ்வன

378 வகை ஊர்வன

3000 வகை மீன்கள் வாழ்கின்றன. 

உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒரு பறவை இந்த மழைக்காடுகளில் தான் இருக்கின்றது.